×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்தவங்க புருஷன் பெயரை தனது புருஷனாக நினைத்து தனது பெயருடன் சேர்த்துக்கொண்ட நடிகை!

Actress abarnathi Instagram name goes viral

Advertisement

கடந்த 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது எங்க வீட்டு மாப்பிள்ளை தொடர்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஆர்யாவுக்கு பெண் தேடும் படலமாக இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் ஏகப்பட்ட பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இறுதியாக மூன்று பெண்களை தேர்வு செய்து, அதில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருவரை திருமணம் செய்து கொண்டால் மற்றவர்கள் வருத்தப்படுவார்கள் என காரணம் கூறி ஆர்யா யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றினார்.

இதனை அடுத்து பிரபல நடிகை சாயிஷாவை காதலித்து ஆர்யா திருமணம் செய்து கொண்டார். இதனிடையே எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார் அபர்ணதி. ரசிகர்களின் பேராதரவை பெற்ற இவர் ஒரு கட்டத்தில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளும் கனவு பலிக்காவிட்டாலும், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் அபர்ணாதிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது அவர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஜெயில் என்ற படத்தில் நடித்துள்ளார்.

தான் வளர்ந்து ஒரு நாயகியாக மாறிய பிறகும் நடிகர் ஆர்யா மீது கொண்ட காதல் காரணமாக அவரை இன்னும் மறக்காமல் அவரது பெயரை தனது பெயருடன் சேர்த்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அபர்ணாதி.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள், ஆர்யா சாயிஷா இருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்கப் போகிறது, அப்படியிருக்க இன்னமும் அவரது பெயரை வைத்துக்கொண்டு ஏன் அழைக்கிறீர்கள் என கமெண்ட் செய்துவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Abarnathi #Eanga veettu maapilai #Arya #Actor Arya
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story