திரைத்துறையில் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி... பிரபல நடிகரின் தந்தை கொரோனாவுக்கு பலி.!
நடிகர் பால சரவணனின் தந்தை எஸ்.ஏ.ரெங்கநாதன் கொரோனா தொற்று காரணமாக மதுரை தனியார் மருத்துவமனை

நடிகர் பால சரவணனின் தந்தை எஸ்.ஏ.ரெங்கநாதன் கொரோனா தொற்று காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
தமிழில் வேதாளம், ஈஸ்வரன் போன்ற பல படங்களில் காமெடி நடிகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் பால சரவணன். பால சரவணனின் தங்கையின் கணவர் சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் தற்போது அவரின் தந்தையும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பால சரவணனின் தந்தை எஸ்.ஏ.ரெங்கநாதன் சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.