×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட கொடுமையே.. ஹீரோவாக சினிமாவில் கலக்கிய பரத்.! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா.!?

அட கொடுமையே.. ஹீரோவாக சினிமாவில் கலக்கிய பரத்.! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா.!?

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வந்தவர் பரத். இவர் தமிழில் முதன் முதலில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே மிகப் பெரும் வெற்றியடைந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. இப்படத்திற்கு பின்பு வெயில் எம்டன் மகன் போன்ற பல திரைப்படங்களில் தனது அட்டகாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

இவ்வாறு தமிழில் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்கான தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில திரைப்படங்கள் தொடர் தோல்வியை அடைந்ததால் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்தது.

இவ்வாறு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்ததால் கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பரத். தற்போது பரத் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார் என்ற செய்தி புகைப்படத்துடன் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் நடிக்கவிருக்கும் ஓன்ஸ் அப்பான் ய டைம் மெட்ராஸ் என்ற திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என்று கூறப்பட்டு வருகிறது.

மேலும் சினிமாவில் கதாநாயகனாக ஜொலித்துக் கொண்டிருந்த பரத், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல், நடிகரும் இயக்குனருமான முத்தையா தனது மகனை கதாநாயகனாக வைத்து எடுக்கவிருக்கும் படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் என்று கூறப்பட்டு வருகிறது. இச்செய்தி வைரலாகி ரசிகர்கள் பரத்திற்கு இந்த நிலைமையா என்று வருத்தத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actor #Kollywood #cinema #Viral #News
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story