யோகிபாபு இவ்வளோ ஒல்லியா இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்
Actor yogibabu slim photo goes viral
தமிழ் சினிமாவில் யாமிருக்க பயமேன் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் யோகி பாபு. இதில் இவர் நடித்திருந்த பண்ணி மூஞ்சி வாயன் கதாபாத்திரம் மாபெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன்மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிய தொடங்கின. மாதம் 10 படங்கள் வெளிவந்தால் அதில் குறைந்தது 8 படங்களிலாவது யோகிபாபு நடித்துள்ளார்.
தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் யோகிபாபு. சமீபத்தில் புதிதாக வீடு ஒன்றையும் கட்டி முதித்துள்ளார் யோகிபாபு. நடிகர் யோகிபாபுவின் இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அவரது உடலும், அவரது முடியும்தான். பார்க்க மிக குண்டாக, தலைநிறைய முடியுடன்தான் இருப்பார் யோகிபாபு.
இந்நிலையில் நாங்களும் ஒரு காலத்துல ஒல்லியாத்தான் இருந்தோம் என்று பார்ப்பதற்கு மிக ஒல்லியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சாக் கொடுத்துள்ளார் நடிகர் யோகிபாபு. இதோ அந்த புகைப்படம்.