×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புற்றுநோயால் மார்பகத்தை இழந்த பிரபல நடிகரின் மனைவி! வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!

actor wife suffered by breast cancer

Advertisement

மார்பக புற்றுநோய் அதிகமாக பெண்களை மட்டுமே தாக்கிவருகிறது. மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்திவிடலாம். கடைசி ஸ்டேஜுக்கு சென்றுவிட்டாள் உயிர்பிழைப்பது கடினமாகும்.

புற்றுநோயால் நடிகர், நடிகைகள் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரபல நடிகை மனிஷா கொய்ராலா, சோனாலி பிந்த்தே போன்ற சினிமா பிரபலங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

மேலும் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ஆயுஷ்மான் குரானாவின் மனைவி 
 தஹிரா கைஷப்பும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

எழுத்தாளர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட தஹிரா கைஷப் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது,  அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பதை தெரிந்துகொண்டார். 

பின்னர் அறுவைசிகிச்சை மூலம்  தனது வலதுபக்க மார்பை நீக்கிக் கொண்டார்.

இந்நிலையில் நேற்று உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தஹிரா தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்  இந்த தழும்பை என் தன்னம்பிக்கைக்குக் கிடைத்த விருதாகவே நினைக்கிறேன். என் தன்னம்பிக்கை எல்லாவற்றையும் தாங்கும் திறன் கொண்டது என காட்டவே இந்த போட்டோவை பதிவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.

 இந்த பதிவை பார்த்த பலரும் அவரது  தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ayushman kuraana #cancer #thahira kaishaf
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story