×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சோகத்தில் இருந்த மக்களுக்கு மீண்டும் ஒரு சோகம் விசுவின் மரணம்! நடிகர் விசு கடந்துவந்த பாதை!

actor visu history

Advertisement


தமிழ் சினிமாவில் குடும்பம் ஒரு கதம்பம், சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு உள்ளிட்ட குடும்ப திரைப்படங்களை இயக்கி நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் விசு. இவரது படங்களுக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

நாடகத்திலிருந்து 1977-ம் ஆண்டு 'பட்டினப் பிரவேசம்' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாசிரியராக அறிமுகமானவர் விசு. அதனைத் தொடர்ந்து 'சதுரங்கம்', 'அவன் அவள் அது', 'மழலை பட்டாளம்' என கதாசிரியராகவே பல படங்களுக்குப் பணிபுரிந்து வந்தார். 

அதனை தொடர்ந்து அவர்  மெல்ல திறந்தது கதவு, அருணாச்சலம், உழைப்பாளி, மன்னன், ஜி, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிகர் கிஷ்முவின் சகோதரர் ஆவார்.

1941-ம் ஆண்டு பிறந்த விசு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, கதாசிரியர் என பன்முக திறமை கொண்டு விளங்கிய அவர் திரைப்படம் மட்டுமின்றி பிரபல தொலைக்காட்சிகளில் அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம் போன்ற பேச்சு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விசு சிகிச்சை பலனின்றி இன்று சென்னையில் உயிரிழந்துள்ளார். 

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடே வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில், நடிகர் விசுவின் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#visu #died
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story