×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டிவி சேனலை வம்பிழுக்கும் நடிகர் விஷால்! 2019 தேர்தலுக்காக வெய்ட்டிங்காம்!

Actor vishal twitt against to newsj tv channel

Advertisement

அதிமுகவின் தலைவராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்வரை ஜெயா தொலைக்காட்சி அதிமுகவின் பக்கம் இருந்தது. அதிமுக சம்மந்தமான அணைத்து செய்திகளும் ஜெயா நியூஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இந்நிலையில் ஜெயலலிதா இறந்தபிறகு அதிமுக இரண்டாக பிரிந்தது. இதில் தினகரன் அணியிடம் ஜெயா தொலைக்காட்சி சென்றுவிட்டது.

இதனால் OPS, EPS அணியினருக்கு தொலைக்காட்சி இல்லாமல் இருந்தது .இந்நிலையில் அதிமுகவிற்காக புது தொலைக்காட்சி தொடங்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்றன. இதன் முதல் கட்டமாக நியூஸ் ஜெ இணையதளம் தொடங்கப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக இன்று நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் புதிதாக தொடங்கப்பட்ட டிவி சேனலை சீண்டும் வகையில் ட்விட்டர் பதிவை பகிர்ந்துள்ளார் நடிகர் விஷால். அந்த பதிவில் 'இன்று முதல் மற்றுமொரு செய்தி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. அபாரம். ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாத சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் எப்படி இது போன்ற ஒரு வியாபார அமைப்பை தொடங்க முடிகிறது? 2019-க்காக காத்திருக்கின்றேன்" என்று மறைமுகமாக நியூஸ் ஜெ தொலைக்காட்சியை தாக்கி விமர்சனம் செய்துள்ளார்.


Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vishal #NewsJ #Vishal twitter
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story