×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigBreaking: நடிகர் விஷால் வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல்; அதிர்ச்சியில் திரையுலகம், கொந்தளிப்பில் ரசிகர்கள்.!

#BigBreaking: நடிகர் விஷால் வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல்; அதிர்ச்சியில் திரையுலகம், கொந்தளிப்பில் ரசிகர்கள்.!

Advertisement

விஷாலின் வீடு மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில், அவரது வீட்டு கண்ணாடிகள் உடைந்தன.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலும் முன்னாளில் பணியாற்றி இருந்தார். இவர் சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று அவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதனால் அவரது வீட்டின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்த சி.சி.டி.வி காட்சிகள் அங்குள்ள கேமிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயம் தொடர்பாக விஷாலின் மேலாளர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த தகவலை அறிந்த விஷால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vishal #tamilnadu #Actor vishal #tamil cinema #கல்வீசி தாக்குதல் #தமிழ் திரையுலகம் #தமிழ் சினிமா #நடிகர் விஷால்
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story