×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. நடிகர் விக்ரமின் மனைவி இவர்தானா! அவர் என்ன வேலை செய்கிறார் தெரியுமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

நடிகர் விக்ரமின் மனைவி சைலஜாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

தமிழ் சினிமாவில் காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்ரம். அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். எத்தகைய கடினமான கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்காக தனது உடலமைப்பை, கெட்டப்பை முற்றிலும் மாற்றி மிகவும் ஈடுபாட்டுடன் நடிப்பார்.

அவ்வாறு அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், சேது, ஐ, இருமுகன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் படைத்தது. மேலும் இன்றளவும் மக்களுக்கு பிடித்தமான பாராட்டப் படக்கூடிய திரைப்படமாகவும் உள்ளது. இந்த நிலையில் விக்ரம் தற்போது கோப்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

      

நடிகர் விக்ரம் 1992 ஆம் ஆண்டு சைலஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு துருவ் விக்ரம் என்ற மகனும், அக்ஷிதா என்ற மகளும் உள்ளனர். மேலும் துருவ் விக்ரமும் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். மேலும் சைலஜா ஒரு சைக்காலஜி நிபுணராம். அவர் தற்போது சென்னையில் உள்ள பிரபல பள்ளியில் சைக்காலஜி ஆசிரியராக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் போதைப் பழக்கம் கொண்ட பலருக்கு கவுன்சிலிங் கொடுத்து மறுவாழ்வு கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vikram #sailaja
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story