அட.. நடிகர் விக்ரமா இது.! என்ன ஆள் அடையாளமே தெரியாம இப்படி மாறிட்டாரே.! புகைப்படத்தை கண்டு மிரண்டு போன ரசிகர்கள்.!
அட.. நடிகர் விக்ரமா இது.! என்ன ஆள் அடையாளமே தெரியாம இப்படி மாறிட்டாரே.! புகைப்படத்தை கண்டு மிரண்டு போன ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில், ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். படத்தில் தனது கதாபாத்திரத்திற்கேற்றார் தனது உடலமைப்புகளை மாற்றிக்கொள்வதில் அவர் வல்லவர். விக்ரம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருந்தார்.
விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 18ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் கோலார் சங்க சுரங்கத்தில் அடிமைகளாக இருந்ததை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. முழுவதும் 3டியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் விக்ரமின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தாடியுடன் செம மிரட்டலாக உள்ளார். இந்த புகைப்படத்தை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.