×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல ஹே ராம் பட நடிகர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை.! ரசிகர்கள் பிரார்த்தனை!!

பிரபல ஹேராம் பட நடிகர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை.! ரசிகர்கள் பிரார்த்தனை!!

Advertisement

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பழமை வாய்ந்த நடிகர் விக்ரம் கோகலே. இவர் கமல் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஹே ராம் படத்திலும் நடித்துள்ளார். பாரம்பரிய சினிமா குடும்பதிலிருந்து வந்த இவர் மராத்தி, இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

77 வயது நிறைந்த விக்ரம் கோகலே உடல்நலக்குறைவால் கடந்த 5ஆம் தேதி புனேவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் சிகிச்சை பெற்று வந்த அவரது சிறுநீரகம், இருதயம்  செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு நேற்று மாலை கோமா நிலைக்குச் சென்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு விக்ரம் கோகலே உயிரிழந்ததாக சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியது. ஆனால் அவரது மனைவி அந்த செய்தி தவறானது என மறுத்துள்ளார். மேலும் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vikram kokale #treatment
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story