மாரடைப்பு வந்ததா?? நடிகர் விக்ரமின் உடல்நிலை குறித்து சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்!
மாரடைப்பு வந்ததா?? நடிகர் விக்ரமின் உடல்நிலை குறித்து சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் விக்ரம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் உடல்நல குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானதும், விக்ரமின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியானது.
அவருக்கு காய்ச்சல் என்றும், மாரடைப்பு என்றும் செய்திகள் உலா வந்தது. இந்நிலையில் விக்ரமிற்கு மார்பில் அசெளகரியம் ஏற்பட்டுதான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அவருக்கு மாரடைப்பு ஏதும் இல்லை எனவும் காவேரி மருத்துவமனை சார்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில், உடல்நலம் குணம் அடைந்து நடிகர் விக்ரம் வீடு திரும்பியுள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் சமீபத்தில் நடித்து முடித்துள்ளார்.