×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அப்பா, அம்மாவுடன் சுற்றுலா சென்ற நடிகர் விஜய்... வைரலாகும் புகைப்படத்தால் குவியும் லைக்ஸ்...

அப்பா, அம்மாவுடன் சுற்றுலா சென்ற நடிகர் விஜய்... வைரலாகும் புகைப்படத்தால் குவியும் லைக்ஸ்...

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக, டாப் ஹீரோக்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த ஆண்டு துவங்கி இன்று வரை நடிகர், விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களுக்கும் சில மனக்கசப்பு ஏற்பட்டது ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தாய் ஷோபா சந்திரசேகருடன் பனி பிரதேசத்தில் சுற்றுலா சென்ற அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த அழகிய புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #Youth photo #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story