ஜெயிலர் ரஜினி மகன் கதாநாயனாக நடிக்கும் படத்தின் அப்டேட் இதோ: தலைப்பு, முதற்பார்வை வெளியீடு.!
ஜெயிலர் ரஜினி மகன் கதாநாயனாக நடிக்கும் படத்தின் அப்டேட் இதோ: தலைப்பு, முதற்பார்வை வெளியீடு.!

சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, சுனில், மெஹ்ரின் பிர்சாடா, அனைகா சுரேந்திரன் உட்பட பலர் நடித்து உருவாகவுள்ள திரைப்படம் இந்திரா.
வசந்த் ரவியின் 07 வது திரைப்படத்திற்கு படக்குழு இன்று இந்திரா என்ற தலைப்பு வைத்து, அதனுடன் வசந்த் ரவியின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.
இதன் வாயிலாக வசந்த் ரவி காவல் அதிகாரி வேடத்தில், பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தை ஜெ.எஸ்.எம் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. போஸ்டரில் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு பேய் பிசாசு அல்ல, அசுரன் என குறிப்பிடத்தப்பட்டுள்ளது.
நடிகர் வசந்த் ரவி முன்னதாகவே 06 படங்களில் நடித்திருந்தாலும், ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திற்கு பின், அவரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.