அவருடன் ஆட வேண்டும்.. ஆசைப்பட்ட விஜய்.! மறுத்துவிட்ட பிரபலம்.! காமெடி நடிகர் பகிர்ந்த சீக்ரெட்!!
போக்கிரி படத்தின் பாடல் ஒன்றில் நடிகர் விஜய், பிரபுதேவா உடன் இணைந்து ஆடியது குறித்து பேட்டி ஒன்றில் வையாபுரி பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட்டான திரைப்படம்தான் போக்கிரி. இந்த படத்தை நடிகரும், பிரபல நடன இயக்குனருமான பிரபுதேவா இயக்கியிருந்தார். இதில் ஹீரோயினாக அசின் நடித்திருந்தார்.
விஜய்யின் போக்கிரி
மேலும் அவர்களுடன் வடிவேலு, நாசர், வையாபுரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் காமெடி காட்சிகள் அனைத்தும் தற்போதும் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் வையாபுரி அண்மையில் பேட்டி ஒன்றில் போக்கிரி படம் குறித்த சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
பிரபுதேவாவுடன் ஆட ஆசை
அதில் அவர், போக்கிரி படத்தின் பாடல் ஒன்றில் நடிகர் விஜய் பிரபுதேவாவுடன் இணைந்து ஆட வேண்டும் என ஆசைப்பட்டார். இதுகுறித்து என்னிடமும், ஸ்ரீமனிடமும் கூறினார். பிரபுதேவா எனது குடும்ப நண்பர். மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் விஜய் ஆசைப்படுவது குறித்து அவரிடம் கூறிய போது முதலில் அவர் மறுத்துவிட்டார். பின்னர் பிரபுதேவாவிற்கு தெரியாமல் அவருக்கு காஸ்டியூம் ரெடி செய்து தினமும் அவரை நச்சரித்து ஒரு வழியாக அனைவரும் அவரை ஆட வைத்தோம் என்று கூறியுள்ளார். படத்தில் போக்கிரி பொங்கல் என்ற பாடலுக்கு பிரபுதேவா மற்றும் விஜய் இருவரும் இணைந்து ஆடி இருந்தனர்.