தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐ வந்துட்டேன்ல... நடிகர் பகத் பாசில் - வடிவேல் இணைந்து நடிக்கும் திரைப்படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

ஐ வந்துட்டேன்ல... நடிகர் பகத் பாசில் - வடிவேல் இணைந்து நடிக்கும் திரைப்படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Actor Vadivelu Fahadh Faasil Starring Movie Announcement  Advertisement

 

ஆர்.பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் பகத் பாசில் - வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

பெயரிடப்படாத இந்த படத்தை வி. கிருஷ்ண மூர்த்தி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் நல்ல வெற்றியை அடைந்தது. இப்படத்தில் நடிகர்கள் வடிவேலு, பகத் பாசில் தங்களின் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருந்தனர். 

இந்த நிலையில், இருவரும் ஆர்.பி சௌத்ரி தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளனர். ஆனால், நடிகர் வடிவேலுவின் மீது விஜயகாந்த் மறைவு விவகாரத்தில் பலரும் கொந்தளிப்பில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vadivelu #Fahadh Fassil #tamil cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story