ரவி பஸ்ரூர் இசையில் தயாராகும் உன்னி முகுந்தனின் திரைப்படம்; விபரம் உள்ளே.!
ரவி பஸ்ரூர் இசையில் தயாராகும் உன்னி முகுந்தனின் திரைப்படம்; விபரம் உள்ளே.!
மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகராக வலம்வரும் உன்னி முகுந்தன், பன்முகத்தன்மை கொண்ட நடிகர் ஆவார். இவர் தற்போது மார்கோ என்ற படத்தை எழுதி, தயாரித்து வழங்குகிறார். இப்படத்தை ஹனீப் அதேநி இயக்குகிறார்.
பூஜைகளுடன் படப்பிடிப்பு தொடக்கம்:
கியுப்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில், ரவி பஸ்ரூர் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கின. இதற்காக படக்குழுவை சேர்ந்த பலரும் நேரடியாக பூஜையில் கலந்துகொண்டு இருந்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது.
அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் தயாராகவுள்ள மார்கோ (MARCO) திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. விரைவில் படப்பிடிப்பை நிறைவு செய்து, படத்தை திரைக்கு கொண்டுவரும் பணியில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு இருக்கிறது.
தமிழில் சீடன், கருடன் ஆகிய படங்களில் நடித்துள்ள உன்னி முகுந்தன், மலையாளத்தில் மிகவும் பரிட்சயமான நடிகராக அறியப்படுகிறார்.