"எனக்கு 20 உனக்கு 18 பட நடிகரை நியாபகம் இருக்கா?!" இப்போ அவர் எப்படி இருக்கார் தெரியுமா?
எனக்கு 20 உனக்கு 18 பட நடிகரை நியாபகம் இருக்கா?! இப்போ அவர் எப்படி இருக்கார் தெரியுமா?
1990ம் ஆண்டு "மனசு மம்தா" என்ற தெலுங்குப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தருண். தொடர்ந்து தமிழில் மணிரத்னம் இயக்கிய "அஞ்சலி" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதையடுத்து 1991ம் ஆண்டு "அபயம்" படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார்.
2000மாவது ஆண்டு வரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த தருண், சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான நந்தி விருதுகள், தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் "நுவ்வே கவாலி" என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதையடுத்து தமிழில் 2002ம் ஆண்டு "புன்னகை தேசம்" படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து எனக்கு 20 உனக்கு 18 படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.
90களில் பெண் ரசிகைகளின் பேவரைட்டாக இருந்த தருண் தற்போது உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உருமாறியுள்ளார். இவரது தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.