×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல நடிகரால் அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்.! மாரடைப்பால் ஏற்பட்ட சோகம்.!

பிரபல நடிகரால் அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்.! மாரடைப்பால் ஏற்பட்ட சோகம்.!

Advertisement

டேய்ஸ் ஆஃப் அவர் லைவ்ஸ் மற்றும் ஜெனரல் ஹாஸ்பிடல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக ஹாலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகரான டெய்லர் கிறிஸ்டோபர், மாரடைப்பு காரணமாக, மரணமடைந்திருக்கிறார். அவருடைய வயது 50. இந்த அதிர்ச்சிகர செய்தியை அவருடைய நண்பரான, நடிகர் மாரிஸ் பெனார்ட் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள குறிப்பின் மூலமாக உறுதி செய்திருக்கிறார்.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டெய்லரின் புகைப்படத்தோடு, வெளியிட்டுள்ள ஒரு குறிப்பில், தற்போது டெய்லர் கிறிஸ்டோபர் நம்மிடையே இல்லை என்று வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். இதன் மூலம், சான்டியோகாவில் இருக்கின்ற அப்பார்ட்மெண்ட் ஒன்றில், அவர் மாரடைப்பு காரணமாக, உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

மேலும் அந்த பதிவில், "அவர் திரைப்படங்களில் தோன்றும்போதெல்லாம், தன்னுடைய திறமையான நடிப்பின் மூலமாக, அவர் நடிக்கும் ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்திருக்கிறார். மேலும், அவர் மிகவும் திறமை மிக்கவர் அதோடு இனிமையானவரும் கூட, மன அழுத்தம் மற்றும் போதை பழக்கத்திற்கு எதிராக, அவர் பலமுறை சிறப்பான வகையில் ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

அவருடைய மறைவால் வருந்தி கொண்டிருக்கும் அவருடைய குடும்பத்திற்கும், அவருடைய வாரிசுகளுக்கும் இறைவன் மனோ தைரியத்தை வழங்கட்டும்." என்று அவர் தன்னுடைய சமூக வலைதள பதிவில் கூறியுள்ளார். இந்த பதிவின் காரணமாக, கிறிஸ்டோபரின் ரசிகர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema #Tailer Cristober #dead #hollywood #America
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story