×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நோய்வாய்ப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சூர்யா! என்ன நடந்தது தெரியுமா?

Actor surya met physically disabled fan

Advertisement

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யாவை சாந்தவேண்டும் என்று ஆசைப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் சூர்யா.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த  தினேஷ் என்ற 16 வயது சிறுவன் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் மிகுந்தவனாக காணப்பட்டான். அந்த சிறுவன் சம்மந்தப்பட்ட பேட்டி ஓன்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.

நோய்வாய்ப்பட்ட நிலையிலும் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் ஓவியங்கள் வரையும் திறமைகொண்ட அந்த சிறுவனுக்கு நடிகர் சூர்யாவை ஒருமுறையாவது சந்திக்கவேண்டும் என்பது ஆசையாம். இந்த தகவல் சூர்யா ரசிகர் மன்றம் மூலம் சூர்யா காதுக்கு செல்ல உடனே அந்த சிறுவனை பார்க்க ஏற்பாடுகள் செய்துள்ளார் நடிகர் சூர்யா.

அதுமட்டும் இல்லாமல் அந்த சிறுவனை நேரில் சந்தித்து அந்த சிறுவனின் மருத்துவ செலவுகளை தாமே ஏற்பதாகவும் கூறியுள்ளார் நடிகர் சூர்யா. அதேபோல் சூர்யாவின் தந்தையான நடிகர் சிவக்குமாரும் அந்த சிறுவனுக்கு ஆறுதல் சொல்லி தான் வரைந்த ஓவியத்தை பரிசாக கொடுத்தார். மேலும் அனைவரும் குடும்பத்துடன் சிறுவன் தினேசுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#surya #actor surya
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story