×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அந்த மனசுதான் சார் கடவுள்.. மாற்றுத்திறனாளி ரசிகர்களுடன் படம் பார்த்த சிம்பு.. நெகிழ வைக்கும் போட்டோஸ் வைரல்..!!

அந்த மனசுதான் சார் கடவுள்.. மாற்றுத்திறனாளி ரசிகர்களுடன் படம் பார்த்த சிம்பு.. நெகிழ வைக்கும் போட்டோஸ் வைரல்..!!

Advertisement

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. 

இப்படம் ஒட்டுமொத்தமாக 473 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் NFDC அரங்கில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக வெந்து தணிந்தது காடு படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்வு நடந்தது. முதல்முறையாக சிம்பு மாணவர்கள் மற்றும் குழந்தைகளுடன் சிறப்பு திரையிடலில் கலந்துகொண்டு அவர்களுடன் உரையாடினார். இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் தான் தயாரிக்கும் அடுத்த படங்களையும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக திரையிட வைப்பதாக உறுதியளித்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#VTK #VTK Movie #Venthu Taninthathu Kadu #Actor simbu #வெந்து தணிந்தது காடு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story