எங்க போனாலும் இதையே கேக்குறாங்க.. ரொம்பவே அடி வாங்கியுள்ளேன்.! நடிகர் சிம்பு ஓபன் டாக்!!
நடிகர் சிம்பு நிகழ்ச்சி ஒன்றில் திருமணம் குறித்து கேட்டதற்கு தனியாக இருப்பதோ அல்லது குடும்பமாக இருப்பதோ மேட்டர் கிடையாது. நாம் ஒழுங்காக, நிம்மதியாக சந்தோசமான மனதுடன் இருப்பதே முக்கியம் என பதிலளித்துள்ளார்.
சினிமாதுறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. அவர் இறுதியாக தக் லைப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பை கொடுக்கவில்லை.
அரசன் சிம்பு
சிம்பு தற்போது அரசன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் இப்படம் வடசென்னை படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
திருமணம் எப்போது
அதற்கு அவர், எங்கே சென்றாலும் திருமணம் எப்போது? என்றே கேட்கின்றனர். திருமணம் நடக்கும்போது நடக்கும். தனியாக இருப்பதோ அல்லது குடும்பமாக இருப்பதோ மேட்டர் கிடையாது. நாம் ஒழுங்காக, நிம்மதியாக சந்தோசமான மனதுடன் இருப்பதே முக்கியம். நம்மால் நான்கு பேரை நிம்மதியாக பார்த்துக் கொள்ள முடிந்தாலே போதும். தத்துவம் பேசுகிறான் என நினைக்க வேண்டாம். வாழ்க்கையில் ரொம்பவே அடி வாங்கியுள்ளேன் என கூறியுள்ளனர்.