ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய நடிகர் சிம்பு! சூப்பர் புகைப்படம் உள்ளே!
Actor simbu latest new look photos goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் இன்று தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர். சினிமாவில் ஒருபக்கம் புகழ் அதிகரித்தாலும், இவர் மீதான சர்ச்சைகளும் மறுபுறம் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
மேலும், பல்வேறு நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கினார் சிம்பு. இந்நிலையில் சமீபத்தில் வெளியான இவரது எந்த படமும் சரியாக ஓடவில்லை. மேலும் உடல் எடை அதிகரித்து பார்ப்பதற்கே பயங்கர குண்டான தோற்றத்தில் காட்சியளித்தார் சிம்பு.
இந்நிலையில் உடல் எடையை குறைப்பதற்காக லண்டன் சென்றிருந்த சிம்பு தனது உடல் எடையை சற்று குறைத்திருந்தார். தற்போது முற்றிலும் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளார் சிம்பு. அவரது சமீபத்திய புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.