உச்சகட்ட கோபத்துடன், கொந்தளித்துபோய் நடிகர் சதிஷ் செய்த காரியம்!! இந்த நடிகைதான் காரணமா?
actor sathish tweet about bigboss

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு.
இதில் 16 போட்டியாளர்களில் ஒருவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே தனது தந்தையுடன் சண்டைபோட்டு ரோட்டில் போராட்டமெல்லாம் நடத்தினார்.
அதேபோல, பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் கத்திகொண்டே, சகப்போட்டியாளர்களுடன் சண்டைபோட்ட வண்ணம் உள்ளார். மேலும் வீட்டில் யாரையும் பேச விடுவதில்லை, தான் செய்வது மட்டுமே சரி என்பதுபோல நடந்து கொள்கிறார். அதனால் வனிதா மீது மக்கள் அதிக கோபத்தை காட்டி வருகின்றனர்,
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் பார்த்து அவ்வப்போது விமர்சனங்களை வெளியிடும் காமெடி நடிகர் சதிஷ் கோபமாக அது பிக்பாஸ் வீடா இல்லை அந்த ஒருத்தருக்கு மட்டும் சொந்தமான வீடா என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.