×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணையும் முன்னணி ஹீரோ.! யார்னு பார்த்தீங்களா.! வெளிவந்த அறிவிப்பு!!

தனுஷின் கேப்டன் பில்லர் படத்தில் இணையும் முன்னணி ஹீரோ.! யார்னு பார்த்தீங்களா.! வெளிவந்த அறிவிப்பு!!

Advertisement

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் அண்மையில் 'திருச்சிற்றம்பலம்' படம் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் மற்றும் வாத்தி போன்ற படங்கள் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த நானே வருவேன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் 
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக ப்ரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் மாநகரம் படத்தின் மூலம் பிரபலமான சந்தீப் கிஷான் நடிக்க உள்ளதாக புதிய போஸ்டருடன் படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sandeep kisaan #thanush #கேப்டன் மில்லர்
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story