×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி..! மன அழுத்தம்..! தனது நண்பன் மற்றும் நடிகர் சேதுராம் மறைவுக்கு நடிகர் சந்தானம் இரங்கல்..!

Actor santhanam condoles to actor sethuram demise

Advertisement

36 வயதில் பிரபல தமிழ் சினிமாவின் இளம் நடிகர் மற்றும் மருத்துவரான சேதுராம் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன்.

சேதுராம், சந்தானம், பவர் ஸ்டார் முவரும் இணைந்து இந்த படத்தை மாபெரும் வெற்றிபெற செய்தனர். இந்த படத்தை அடுத்து ஒருசில படங்களில் நடித்த சேதுராம் சமீபத்தில் வாய்ப்புகள் ஏதும் இன்றி தனது மருத்துவர் பணியை தொடர்ந்தார். இந்நிலையில்தான், நேற்று இரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் சேதுராம் மரணமடைந்துள்ளார்.

இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இந்நிலையில், என் உயிர் நண்பன் சேதுவின் மரணத்தால் தான் அதிர்ச்சியில் உறைந்திருப்பாதகவும், அவருடைய ஆன்மா நிம்மதியடைய பிரார்த்திப்பதாகவும் நடிகர் சந்தானம் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#RIP Sethuram #Actor sethuram #Sethuram passed away
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story