நடிகர் விஜய் மனைவி சங்கீதாவை பிரிந்து விட்டாரா.! அவங்க இப்போ எங்கே இருக்காங்க?? போட்டுடைத்த நண்பன் நடிகர் சஞ்சீவ்!!
நடிகர் விஜய் மனைவி சங்கீதாவை பிரிந்து விட்டாரா.! அவங்க இப்போ எங்கே இருக்காங்க?? போட்டுடைத்த நண்பன் நடிகர் சஞ்சீவ்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து தளபதியாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளவர் நடிகர் விஜய். அவர் தற்போது ஜனநாயகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவரது கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.
தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா. அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக சங்கீதா மற்றும் விஜய் இருவரும் பிரிந்துவிட்டதாகவும், சங்கீதா தனது பிள்ளைகளுடன் லண்டனில் செட்டிலாகிவிட்டதாகவும் வதந்திகள் பரவி வந்தது. ஏனெனில் விஜய்யின் மனைவி சங்கீதா கடைசியாக மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் கலந்து கொண்டார். அதன்பின் எந்த நிகழ்ச்சியிலும், விஜய் நடத்திய பொதுக்குழு கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. விஜய்யின் பெற்றோர்களே கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் விஜய்யின் நடிகரான சீரியல் நடிகர் சஞ்சீவ் அவரது மனைவி ப்ரீத்தியுடன் ஜீ தமிழில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்ச்சியில் அவர்களிடம் விஜய் குறித்து சகேள்வியெழுப்பப்பட்ட நிலையில் சஞ்சீவ், நானும் எங்களது நண்பர்களும் அடிக்கடி விஜய் வீட்டிற்கு செல்வோம். சங்கீதா சமைத்துக் கொடுப்பார். அவரது சமையல் நன்றாக இருக்கும். விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பிரியவில்லை. தற்போது ஒரே வீட்டில்தான் உள்ளனர். விஜய் அவரது குடும்பத்தை வெளி உலகிற்கு காட்டிக்கொள்ள விரும்பவில்லை என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அட.. இந்த விஷயம் தெரியுமா?? கில்லி படத்தில் நடிகர் விமல் பாடியிருக்காரா!! அதுவும் எந்த பாடலில் தெரியுமா??
இதையும் படிங்க: அட.. இந்த விஷயம் தெரியுமா?? கில்லி படத்தில் நடிகர் விமல் பாடியிருக்காரா!! அதுவும் எந்த பாடலில் தெரியுமா??