×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போதை தலைக்கேறி, வேட்டி அவிழ்ந்து ரோட்டில் விழுந்த பிரபல தமிழ் நடிகர்! வைரலாகும் வீடியோ.!

actor sakthi falling on road after drinking

Advertisement

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநராக பிரபலமானவர் பி. வாசு. இவரது மகன் சக்தி. இவர் சின்னத்தம்பி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து  தொட்டால் பூ மலரும் படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், அதற்கு பிறகு நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 

அதை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று ’ட்ரிக்கர் ஸ்டார்’ சக்தி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.  

இந்நிலையில் நடிகர் சக்தி நேற்று மதியம் சூளைமேடு இளங்கோவடிகள் நகரில் தனது காரில் சென்றுக்கொண்டிருந்தபோது சாலையில் நின்றுக்கொண்டிருந்த காரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். 


இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை விரட்டி சென்று  பிடித்துள்ளனர்.  மேலும் இதுகுறித்து  போலீசாரிடமும் தெரிவித்துள்ளனர்.  பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை விடுவித்தனர்.

இச்சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sakthi #drive #drunk
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story