×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அண்ணன் இறந்த ஒரு வருடத்திற்குள்ளேயே பிரபல முன்னணி நடிகர் திடீர் மரணம்! கண்ணீருடன் திரைப் பிரபலங்கள் இரங்கல்!!

பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான ராஜீவ் கபூர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்கபூர் மகன்களில் ஒருவர் ராஜீவ் கபூர். 1983ஆம் ஆண்டு வெளிவந்த ஏக் ஜான் ஹைன் ஹம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் அதனை தொடர்ந்து லவ்வர் பாய், ஹம் தோ சலே பர்தேஸ், சுக்ரியா, ஜபர்தஸ்த், ஆஷ்மான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இயக்குனராக அறிமுகமான அவர் பிரேம்கிராந்த் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் அவரது சகோதரரான ரிஷி கபூர் ஹீரோவாக நடித்துள்ளார்.

மேலும் ராஜீவ் கபூர் ஏராளமான படங்களை தயாரித்தும் உள்ளார். இவ்வாறு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகதன்மை கொண்டு விளங்கும் ராஜீவ் கபூர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் கரீனா கபூர், கரிஷ்மா கபூர் உள்ளிட்ட பலரும் ராஜீவ் கபூர் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ராஜீவ் கபூரின் சகோதரர்களுள் ஒருவரும், பாலிவுட்டின் முன்னணி நடிகருமான ரிஷி கபூர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் இறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் அவரது சகோதரும் உயிரிழந்தது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajiv kapoor #died #heart attack
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story