×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சூப்பர் ஸ்டார் வீட்டில் கோலாகலமாக நடந்த கொண்டாட்டம்! யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீர்களா.! அட்டகாச புகைப்படங்கள்!!

சூப்பர் ஸ்டார் வீட்டில் கோலாகலமாக நடந்த கொண்டாட்டம்! யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீர்களா! அட்டகாச புகைப்படங்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக, சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினி. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் வெளியாகும் நாட்கள், மற்றும் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடுவர்.

ஸ்டைலுக்கு பெயர் போன நடிகர் ரஜினிகாந்த்தின் திரைப்படங்கள் தற்போதும் ரசிகர்களால் பெருமளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது.

இந்த நிலையில் டிசம்பர் 12 நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது 71வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதனை முன்னிட்டு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வந்தனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது மனைவி மகள்கள் மற்றும் பேரன்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajini #birthday
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story