×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சமூக சேவைக்கான அன்னை தெரசா விருது பெரும் தமிழ் நடிகர்.

actor ragava lawrense-new record-mother therasa

Advertisement

சிறந்த சமூக சேவகரான அன்னை தெரசாவின் 108வது பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. அன்னை தெரசா டிரஸ்ட் சார்பில் நடந்தப்பட்ட  இந்த விழாவில் நிறுவனர் ஜி.கே.தாஸ் தலைமை தாங்கினார். அன்னை தெரசா பேரவை மாநில தலைவர் டி.வி. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். 


தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பு சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.இதில் சிறந்த சமூக சேவைக்கான விருது திரைப்பட நடிகர் ராகவா லாரன்சுக்கு வழங்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில்  டான்ஸ் மாஸ்டர் ஆக இருந்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர்  நடிகர் ராகவா லாரன்ஸ்.அவர் அவ்வப்போது மாற்றுத்திறனாளிகள் உட்பட அணைத்து தரப்பு மக்களுக்கும் தம்மால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்து வருகிறார்.இதனால் அன்னை தெரசா பிறந்தநாளை முன்னிட்டு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.


இவ்விருது பற்றி அவர் கூறுகையில், ‘ இந்த உலகின் முதல் கடவுளாக தாயை நினைக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு  நான் நோயால் பாதிக்கப்பட்டிருந்தேன். அப்போது என் தாய் என்னை   நம்பிக்கையோடு காப்பாற்றினார். அவர் இல்லை என்றால் , நான் இல்லை என்று கூறினார். பிறகு இவ்விருதை என் அம்மாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என தெரிவித்துள்ளார். 

 நடிகர் ராகவா லாரன்ஸ் தன் அம்மாவுக்காக ஒரு கோயில் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story