நடிகர் பிரசாந்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்.
Actor prashanth in gawtham menon direction

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். 1990 ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோ அவதாரம் எடுத்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்தார்.
அதன்பின்னர் புது நடிகர்களின் வருகை, அடுத்தடுத்த படங்களில் தோல்வியால் இவரது சினிமா வாழ்க்கை மோசமானது. சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றில் சப்போர்டிங் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் மீண்டும் உச்சத்தை தொட உள்ளார் நடிகர் பிரசாந்த். அந்தாதுன் என்ற ஹிந்தி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. 32 கோடி பட்ஜெட்டில் உருவாகி 450 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நிகழ்த்தியது இந்த படம்.
தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளதாகவும், பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், விரைவில் அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.
பிரசாந்த், கவுதம் மேனன் காம்பினேஷனில் இந்த படம் ஹிட் அடித்துவிட்டால் பிரசாந்த் தமிழ் சினிமாவில் மீண்டும் உச்சத்தை தொட்டுவிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.