அருகில் நடிகை கிருத்தி சனோன்.! திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் பிரபாஸ்.! என்ன கூறியுள்ளார்??
அருகில் நடிகை கிருத்தி சனோன்.! திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் பிரபாஸ்.! என்ன கூறியுள்ளார்??
தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு உலகளவில் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். நடிகர் பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார்.
ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபாஸ் ராமராக நடித்துள்ளார். மேலும் கிரித்தி சனோன் சீதையாகவும், ராவணனாக சைப் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 16-ந் தேதி திரையரங்கில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் பிரமோஷன் பணிகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று திருப்பதியில் நடைபெற்ற இப்படத்தின் விழா நடைபெற்றுள்ளது. அதில் ரசிகர் ஒருவர் பிரபாஸிடம், எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? என கேட்டுள்ளார். அதற்கு அவர்,“கல்யாணம் என்றாவது ஒருநாள் நடக்கும். ஆனால் கண்டிப்பாக திருப்பதியில்தான் எனது திருமணம் நடக்கும் என அறிவித்துள்ளார். அப்பொழுது நடிகை கிருத்தி சனோனும் உடன் இருந்துள்ளார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் கிருத்தி சனோன், பிரபாஸ் இருவரும் காதலிக்கிறார்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என நடிகை கிருத்தி சனோன் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.