×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் மகத் - பிராச்சி ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? செம ஹேப்பியில் வெளியிட்ட புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசி

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் மகத். இவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார். 

அதனைத் தொடர்ந்து மகத் காளை, மங்காத்தா, ஜில்லா போன்ற பல படங்களில் துணை முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இந்நிலையில் மகத், பிராச்சி என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் தனது மனைவி பிராச்சி கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் அவருக்கு வளைகாப்பு விழாவும் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு இன்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அளவில்லா மகிழ்ச்சியில் நடிகர் மகத் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mahath #born baby
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story