×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆசைதான்.. ஆனா அது உண்மையில்லை! தீயாய் பரவும் தகவல்! உண்மையை உடைத்த நடிகர் மாதவன்!!

தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அலைபாயுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசி

Advertisement

தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அலைபாயுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். பின்னர் அவர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ரன் படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக களமிறங்கினார்.

அதனை தொடர்ந்து  அவர் தம்பி, வேட்டை, விக்ரம் வேதா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். நடிகர் மாதவன் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் தெலுங்கில் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகும் ஆக்சன் படத்தில் கெத்தான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில், லிங்குசாமியுடன் இணைந்து பணியாற்ற மிகவும் விரும்புகிறேன். அவர் ஒரு அற்புதமான, அன்பான மனிதர். ஆனால் சமீப காலமாக லிங்குசாமி படத்தில் நான் வில்லனாக நடிப்பதாகவும் பரவி வரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என கூறியுள்ளார்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Madhavan #Lingusamy #Villain
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story