×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. நடிகை குஷ்பூவுக்கு இவ்வளவு அழகிய தம்பியா! அட.. இவரும் ஹீரோவா நடிச்சிருக்காரா! வைரலாகும் புகைப்படம்!!

வாவ்.. நடிகை குஷ்பூவுக்கு இவ்வளவு அழகிய தம்பியா! அட.. இவரும் ஹீரோவா நடிச்சிருக்காரா!: வைரலாகும் புகைப்படம்!!

Advertisement

தமிழ் சினிமாவில் வருஷம் 16 என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை குஷ்பூ. முதல் படத்திலேயே பிரபலமான அவர் தொடர்ந்து ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகையாக வலம் வந்த அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. 

நடிகை குஷ்பூ தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். நடிகை குஷ்பூ இறுதியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். குஷ்பு கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான சுந்தர் சியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது நடிகை குஷ்பூவின் தம்பி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது குஷ்புவின் தம்பி பெயர் அப்துல்லா. அவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மாயமோகினி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை குஷ்பூவும் அவரது தம்பியும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kushbu #brother
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story