டாடா பட வெற்றியை தொடர்ந்து கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய கவின்... எவ்வளவு தெரியுமா.?
டாடா பட வெற்றியை தொடர்ந்து கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய கவின்... எவ்வளவு தெரியுமா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பரிச்சயமானவர் நடிகர் கவின். அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது.
இவர் நடிப்பில் வெளியான நட்புனா என்னா தெரியுமா, லிஃப்ட் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கவின் நடிப்பில் டாடா திரைப்படம் வெளியானது. இதில் கவின் தனது எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார். இவருடன் அபர்ணா தாஸ், பாக்யராஜ், விடிவி கணேஷ் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி சில நாட்களிலேயே பல கோடி வசூல் செய்தது.
தற்போது டாடா திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அமோக வரவேற்பை பெற்ற டாடா திரைப்பட வெற்றியை தொடர்ந்து கவின் தனது சம்பளத்தை 1.50 கோடி வரை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.