×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. கதிர்- திவ்யபாரதியின் படத்திற்கு அஜித்தின் பிளாக்பஸ்டர் பட தலைப்பா.! ரொமான்ஸ் ததும்பி வழியும் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!!

அட.. கதிர்- திவ்யபாரதியின் படத்திற்கு அஜித்தின் பிளாக்பஸ்டர் பட தலைப்பா.! ரொமான்ஸ் ததும்பி வழியும் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!!

Advertisement

மலையாளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் 'இஷ்க்'. இப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. ஷிவ் மோஹா இயக்கும் இப்படத்தில் நடிகர் கதிர் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக திவ்யபாரதி நடிக்கிறார். 

மேலும் இந்த படத்தில் பூர்ணா, லிங்கா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ரேவா இசையமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

படத்துக்கு ஆசை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆசை என்பது 1995 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் அஜித் மற்றும் சுவலஷ்மி நடிப்பில் வெளிவந்த படத்தின் டைட்டில் ஆகும். இந்நிலையில் கதிர் நடிப்பில் உருவாகியுள்ள ஆசை படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அது  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kathir #Divyabharathi #Aasai
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story