தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விருமன் படம் பார்த்து சங்கர் மகளுக்கு வெறித்தனமாக லவ் ப்ரபோஸ் செய்த முக்கிய பிரபலம்... கரகோஷத்தால் பரவசம்.!

விருமன் படம் பார்த்து சங்கர் மகளுக்கு வெறித்தனமாக லவ் ப்ரபோஸ் செய்த முக்கிய பிரபலம்... கரகோஷத்தால் பரவசம்.!

actor-cool-suresh-pressmeet-viruman-movie-review-adithi Advertisement

இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடித்துள்ள திரைப்படம் "விருமன்". இப்படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து ராஜ்கிரண், சூரி, பிரகாஷ்ராஜ் மற்றும் கருணாஸ் போன்ற பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விருமன் படத்தை பார்த்துவிட்டு வந்து பேசிய நடிகர் கூல் சுரேஷ், "விருமன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தேன். விருமன் படம் விறுவிறுப்புடன் இருக்கிறது.

Actor Cool Suresh

கார்த்திக் சார் அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டிய கதை இது. பருத்திவீரன் திரைப்படத்திற்கு பின்னர் தரமான கிராமத்து கதை. உங்களின் தொடைக்காகவே படத்தை பார்க்க பலரும் வருவார்கள். விருமன் வந்தால் பேதியாகும், பீதியாகும். மேலும், படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதீதி நடித்துள்ளார். அவர் சிறப்பாக நடித்துள்ளார். நான் இயக்குனர் சங்கரின் மகள் அதிதியை காதலிக்கிறேன்.

நீங்கள் எடுக்கும் படத்தில் காதலை சேர்த்து வைப்பீர்கள். நான் உங்களின் மகளை காதலிக்கிறேன். எங்களின் காதலை சேர்த்து வையுங்கள். செய்தியாளர்கள் முன்பே காதலை வெளிப்படுத்துகிறேன். நீங்கள் பணக்கார மனிதர். உங்களின் மகளை உங்கள் அளவுக்கு பார்த்துக்கொள்ள முடியாவிட்டாலும், கயிற்று கட்டிலில் அமர வைத்து கால் அமுக்கி விடுவேன். 

சங்கர் சார், உங்களின் மகளை எனக்கு கட்டிவைக்கவில்லை என்றால் கமிஷ்னரிடம் மனுகொடுப்பேன். அதிலும் பதில் கிடைக்கவில்லை என்றால் முதல்வரின் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவேன். வெந்து தணிந்தது காடு என் காதலி அதிதிக்கு வணக்கத்தை போடு. அடுத்ததாக அதீதி சிவகார்த்திகேயனுடன் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் சார், அதீதி உங்களின் அண்ணி போன்றவள். பார்த்து பக்குவமாக பதமாக இதமாக நடிக்க வேண்டும்" என்று பேசினார்.

நிகழ்வின் போது கூல் சுரேஷுடன் இருந்த அவரது ஆதரவாளர்கள், அதிதிக்கு லவ் ப்ரபோஸ் செய்ததும் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actor Cool Suresh #director shankar #adithi shankar #tamil cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story