சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்.! தலைவரான பிரபல வில்லன் நடிகர்.! யார் தெரியுமா??
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் நடிகர் பரத் 491 வாக்குகள் பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் பிரபலங்கள் என்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்நிலையில் 2000 உறுப்பினர்கள் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. இதன் முன் சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக சிவன் சீனிவாசன், செயலாளராக போஸ் வெங்கட் ஆகியோர் இருந்து வந்தனர்.
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்
அவர்களது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. மேலும் ஜூலை 22 இதற்கான வேட்புமனு தாக்கலும் தொடங்கியது. இந்த நிலையில் நேற்று காலை சென்னை விருகம்பாக்கத்தில் காலை மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக பெப்சி அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் உமா சங்கர் பாபு நியமிக்கப்பட்டு தேர்தலை நடத்தி வைத்தார்.
இதையும் படிங்க: ஜப்பானில் கோலாகலமாக நடந்த நடிகர் நெப்போலியன் மகனின் திருமணம்.! குவிந்த முன்னணி பிரபலங்கள்!!
சின்னத்திரை நடிகர் நடிகைகள் பலரும் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இந்த நிலையில் 491 வாக்குகளை பெற்று நடிகர் பரத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பரத் பல தொடர்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வில்லனும் நகைச்சுவை நடிகருமான மதன் பாப் இன்று சென்னையில் காலமானார்! தமிழ் திரையுலகில் ஆழ்ந்த சோகம்...