தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆமாம் அது உண்மைதான்! முதன்முதலாக வெளிப்படையாக போட்டுடைத்த பகல்நிலவு ஹீரோ! என்ன இப்படி சொல்லிட்டாரே!!

பகல் நிலவு சீரியல் நடிகர் அசீம் தனக்கும் தனது மனைவிக்கும் ஏற்பட்ட விவாகரத்து குறித்து முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

actor-azeem-post-about-divorce-with-her-wife Advertisement

துவக்கத்தில் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான ப்ரியமானவளே தொடரின் மூலம் சீரியல் பக்கம் களமிறங்கியவர் நடிகர் அசீம். அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பகல் நிலவு, தெய்வம் தந்த வீடு, கடைக்குட்டி சிங்கம் என பல சீரியல்களில் நடித்துள்ளார்.

பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ்  ஷிவானி நடித்திருந்தார். நடிகர் ஆசீமுக்கு சல்மா என்பவருடன் திருமணம் நடைபெற்று ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாக தகவல்கள் பரவி வந்தது.

    Azeem

இந்த நிலையில் தற்போது அசீம் தனக்கு விவாகரத்து ஆனது குறித்து முதன்முறையாக சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், அனைவருக்கும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பரஸ்பரமாக பிரிந்து விட்டோம். மேலும் எனது திருமணம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களை குறித்து மேற்கொண்டு பேச விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
     

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Azeem #salma #divorce
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story