×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி.! பிரபல நடிகர், அரசியல் பேச்சாளர் திடீர் மாரடைப்பால் மரணம்.!

அதிர்ச்சி.! பிரபல நடிகர், அரசியல் பேச்சாளர் திடீர் மாரடைப்பால் மரணம்.!

Advertisement

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரபலங்கள் உயிரிழந்து வருவது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. தற்போது நடிகர் அருள்மணி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாக இருந்தவர் அருள்மணி. இவர் வேல், அழகி, தென்றல், தாண்டவக்கோனே, சிங்கம், லிங்கா என பல படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமான நடிகராக வலம் வந்தார்.  அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டிய அவர் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்தார்.

இந்நிலையில் அவர் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று பிரச்சாரத்திற்கு இடையே சற்று ஓய்வெடுத்த நிலையில், தீடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் அருள்மணியின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Anbumani #dead #heart attack
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story