தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சயீப் அலிகான் விவகாரத்தில், தவறாக வைரலாகிய போட்டோ.. வேலை, திருமணத்தை இழந்த இளைஞர்..!

சயீப் அலிகான் விவகாரத்தில், தவறாக வைரலாகிய போட்டோ.. வேலை, திருமணத்தை இழந்த இளைஞர்..!

  Actor Alikhan Knife Attack Case Trending Pic Lost Youth Life and Marriage  Advertisement

மும்பையில் வசித்து வந்த நடிகர் சயீப் அலிகானின் வீடு புகுந்த நபர் ஒருவர், கடந்த ஜனவரி 17 அன்று நடிகரை தாக்கி இருந்தார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய வங்கதேசத்தை சேர்ந்த நபர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பான விசாரணையின்போது, மும்பை காவல் நிலையத்திற்கு சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் அழைத்து வரப்பட்டார். முதலில் அவர் தான் தாக்குதல் நடத்தியவர் என தகவல் வெளியாகி வைரலாகியது. ஆனால், காவல்துறை முதலில் அதனை மறுத்து, பின் உண்மையான குற்றவாளியை கைது செய்தது.

இரயிலில் பயணித்தவரை மடக்கிய போலீஸ்

இந்நிலையில், தவறாக வைரலாகிய தனது புகைப்படம் தொடர்பான விஷயத்தால், தனக்கு வேலை மற்றும் திருமணம் ஆகியவை பறிபோனது என இளைஞர் தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர் கனோஜியா, மும்பையில் உள்ள மேற்கு இரயில்வே சுற்றுலா நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சனவரி மாதம் 17ம் தேதி மும்பையில் இருந்து சத்தீஷ்கரின் நெஹ்லா செல்ல, உடல்நிலை சரியில்லாத பாட்டியை கவனிக்க இரயிலில் பயணம் செய்தார். 

இதையும் படிங்க: 4 நாட்கள் சிகிச்சைக்கு ரூ.36 இலட்சம் பில்.. சைப் அலிகான் சிகிச்சைக்கு இவ்வளவு கட்டணமா? சர்ச்சை.!

நிரபராதிக்கு நேர்ந்த சோகம்

இரயில் பிளசிப்பூரில் சென்றுகொண்டு இருந்தபோது, சயீப் அலிகான் வழக்கில் தொடர்புடைய நபர் என கனோஜியா சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மும்பை காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார். ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் இரயிலில் சென்றுகொண்டு இருந்த நபரை அதிகாரிகள் மடக்கி கைது செய்து இருந்தனர். பின் விசாரணையில் அவர் நிரபராதி என தெரியவந்து, உண்மை குற்றவாளி கைது செய்யப்பட்டு இருந்தார்.

Actor Saif Ali Khan

வேலை, திருமணம் காலி

இதற்குள் கைது நடவடிக்கையின்போது கனோஜியா தான் உண்மையான குற்றவாளி என கைது வீடியோ வெளியாக, அவரின் வேலை உடனடியாக பறிபோயுள்ளது. மேலும், உடல்நிலை சரியில்ல்லாத பாட்டியை நேரில் சந்திக்க சென்றதோடு, திருமணத்திற்கு தயாராகி வந்தவர், மணப்பெண் மற்றும் மணப்பெண்ணின் குடும்பத்தினரையும் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். அனைத்தும் பொய்த்துப்போயுள்ளது. 

மேலும், வேலையை இழந்து, திருமனனத்தையும் கைகூடாமல் இழந்தவர் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி இருக்கிறார். அவர் பணியாற்றி வந்த நிறுவனத்தின் உயர் அதிகரிக்கும், வழக்கில் சிக்கி இருப்பதால் வேளையில் இருந்து நிறுத்துவதாகவும் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: #Breaking: நடிகர் சைப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம்; குற்றவாளி கைது.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actor Saif Ali Khan #Knife Attack Case #Trending Pic #சைப் அலிகான்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story