கூல் போஸில் தல அஜித்; கொண்டாடும் ரசிகர்கள்... வைரலாகும் தல கிளிக்ஸ் இதோ.!
கூல் போஸில் தல அஜித்; கொண்டாடும் ரசிகர்கள்... வைரலாகும் தல கிளிக்ஸ் இதோ.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் அஜித் குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு நிறைவுபெற்று, படக்குழு தாயகம் திரும்பவுள்ளது.
படப்பிடிப்பு இடைவேளையின்போது படக்குழுவுடன் அஜித் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சிவப்பு நிற ஆடையுடன் தல அஜித் கூலாக தோன்றுகிறார். இந்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.