எலும்பும் தோலுமாக மாறிய துள்ளுவதோ இளமை திரைப்பட நடிகர் அபிநய்! தேடி சென்று உதவி செய்த KPY பாலா! வைரல் வீடியோ..
துள்ளுவதோ இளமை நடிகர் அபிநய்க்கு Kpy பாலா உதவிய காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தமிழ் திரையுலகில் ஆரம்ப வெற்றி பெற்றிருந்தாலும், தொடர்ச்சியான வாய்ப்புகள் இல்லாமல் வாழ்நாள் போராட்டத்தில் தள்ளப்பட்ட நடிகர் அபிநய்க்கு தற்போது வரும் ஆதரவு ரசிகர்களை உருக்கியுள்ளது. அவரது உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
‘துள்ளுவதோ இளமை’ புகழ் அபிநய்
நடிகர் தனுஷுடன் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் நடித்தவர் தான் அபிநய். அதன்பிறகு ஜங்ஷன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஹீரோவாகவும், பின்னர் துணை வேடங்களிலும் நடித்தார். வாய்ப்புகள் குறைந்ததால், அவ்வப்போது அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வருவதாக கடந்த வருடங்களில் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Kpy பாலாவின் மனிதநேயம்
தற்போது வயிறு வீக்கம் மற்றும் பலவீனத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர் அபிநய். இவரது நிலைமை குறித்து சமீபத்தில் வெளியாகிய காணொளியில், அவர் மிகவும் மோசமான உடல்நிலையில் இருப்பது தெரிவிக்கிறது. இந்த நிலையில், காமெடி நடிகர் Kpy பாலா நெகிழ்ச்சி கொள்கும் வகையில் ஒரு லட்சம் ரூபாயை வழங்கி உதவியுள்ளார்.
இதையும் படிங்க: கடலூரில் உள்ள கோவிலில் தீ மிதித்த குக் வித் கோமாளி புகழ்! பக்தி மயமான தருணம்! இணையத்தில் செம வைரலாகும் வீடியோ..
வெகுவாக பகிரப்படும் காணொளி
அபிநய்க்கு உதவிய காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் Kpy பாலாவின் மனிதநேயத்திற்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். இந்த செயல் திரையுலகில் நல்லதொரு உணர்வைப் பரப்பியுள்ளது.
நடிகர் அபிநய்க்கு விரைவில் உடல்நலம் மீண்டேழ வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். இவருக்கான ஆதரவு தொடர வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.