×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஹர்பஜன் சிங் - லாஸ்லியா நடிக்கும் படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

Action king arjun joins with harbajan singh movie

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்பஜன் சிங் - பிக்பாஸ் புகழ் லாஷ்லியா நடிக்கும் படத்தில் வில்லனாக பிரபல தமிழ் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜான் பால்ராஜ், ஷாம் சூர்யா தயாரித்து இயக்கும் படம் பிரெண்ட்ஷிப். இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங். ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் லாஷ்லியா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாவுள்ளார்.

இந்நிலையில் இவர்களுடன் நடிகர் அர்ஜுன் இணைந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. நடிகராக இருந்து, தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துவரும் அர்ஜுன் ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Arjun #losliya
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story