புட்ட பொம்மா பாடலுக்கு நடிகையுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட நடிகர் விஜய்.. வைரலாகும் வீடியோ.!
புட்ட பொம்மா பாடலுக்கு நடிகையுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட நடிகர் விஜய்.. வைரலாகும் வீடியோ.!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து இளைய தளபதி எனும் பெயர் பெறுகிறார். இவரின் நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் 10வது மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மக்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டது. மேலும் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்வது போன்ற அரசியல் சம்பந்தமான நிகழ்வுகளை நிகழ்த்தி வருகின்றனர்.
தற்போது விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு பல அரசியல் பிரபலங்கள் மற்றும் நடிகைகள், நடிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே புட்ட பொம்மா பாடலுக்கு நடிகர் விஜயுடன் இணைந்து ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.