நடிகர் சூர்யாவா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே.?
நடிகர் சூர்யாவா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே.?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார்.
மேலும் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற நிலையில், நடிகர் சூர்யாவின் புகைப்படம் அடிக்கடி இணையத்தில் வெளியாகி சூர்யா ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா ஒன்று சேர்ந்து ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது.
இதன்படி தற்போது மீண்டும் சூர்யாவின் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவில் ஸ்டைலிஷான லுக்கில் வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.