×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய்க்கு வில்லனாக நடித்த பிரபல நடிகருக்கு படுகாயம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சுதீப் accident in shooting

Advertisement

கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்பவர் நடிகர் சுதீப். தமிழில் நான் ஈ, புலி, முடிஞ்சா இவன புடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் இந்தியில் தயாராகும் தபாங்-3 என்ற படத்தில் சுதீப் தற்போது நடித்து முடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து தற்போது கன்னடத்தில் தயாராகும் ‘கோட்டிகோபா-3’ என்ற புதிய படத்துக்கு சுதீப் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் படப்பிடிப்பு  ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். 

ஆனால் சுதீப் படத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு முதுகில் பலத்த அடிபட்டது. சுதீப் வலியால் துடித்துள்ளார்.

உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில வாரங்கள் சுதீப் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sudeep #accident #vijay
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story