×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நான் தப்பிச்செல்லாம் ஓடலை.! இதுதான் நடந்தது! மருத்துவமனையிலிருந்து நடிகர் கணேஷ்கர் கதறல்!

நான் தப்பிச்சுலாம் ஒடலை.! இதுதான் நடந்தது! மருத்துவமனையிலிருந்து கணேஷ்கர் கதறல்!

Advertisement

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி காமெடி நட்சத்திரங்களாக வலம் வந்தவர்கள் ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ்கர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணேஷ்கர் சாலையில் தனது காரில் பட்டினம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது விபத்தை ஏற்படுத்தியுள்ளார் எனவும், காரை அங்கேயே போட்டுவிட்டு தப்பித்து ஓடி தலைமறைவாகியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணேஷ்கர் தனக்கு நேர்ந்த விபத்து குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சாலையில் இருந்த வேகத்தடையில் மோதி நிலை தடுமாறியதால் கார் டிவைடரில் மோதியது. சென்ற வேகத்தில் நெஞ்சில் ஸ்டேரிங் அடித்தது.

இந்நிலையில் விபத்து குறித்து செய்தி அறிந்து ஆர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து என்னை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அந்த இக்கட்டான நேரத்தில் கார் எப்படி ஞாபகத்திற்கு வரும். நாங்கள் மருத்துவமனையில் இருந்தது போலிஸ்க்கு தெரியாது. அதனால்தான் அவர்கள் என்னை தேடினர்.நான் குடித்துவிட்டு வண்டி ஓட்டினேனா என சோதனை செய்யவே அவர்கள் என்னை தேடினர். தான் குடித்துவிட்டு கார் ஓட்டவில்லை, தலைமறைவாகவும் இல்லை என அவர் கூறியுள்ளார்

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Arthi #Ganeshkar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story